திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்!
திருமணம் செய்து வைப்பது ஒரு கும்பாபிஷேகத்திற்கு சமம்!!
~ திரு.K.V.மாணிக்கம் குருசாமி
இன்றைய அவசரமான உலகில் உறவினர்கள், நண்பர்கள், என பலர் இருந்தாலும் வரன் தேடுவதில் அவர்களின் உதவி இல்லாமல் தாங்கள் படும் சிரமங்களை போக்கி உங்களுக்கு தகுந்த வரன்களை விரைவாகவும், பொருத்தமாகவும், எவ்வித சிரமும் இன்றி அமைத்து கொள்வதற்காகவே இந்த www.kvmmatrimony.in என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளோம்.
KVM திருமண தகவல் மையமானது தெய்வத்திரு.K.V.மாணிக்கம் குருசாமி அவர்களின் 40 ஆண்டுகளுக்கு மேலான ஜோதிட அனுபவத்தை கொண்டு பலரும் வரன் தேடுவதில் உள்ள சிரமத்தை கண்டு வரன் தேடும் அனைவருக்கும் உதவும் வகையில் 2011ம் ஆண்டு KVM திருமண தகவல் மையத்தை தொடங்கினார். தொடங்கிய நாள் முதல் இன்று வரைக்கும் 2000க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்திருக்கின்றோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை எனும் ஒளி விளக்கு ஏற்றி வைத்துள்ளோம்.
ஜாதகத்தில் திருமணத்தடை, தோஷங்கள் எதுவும் இருந்தால் தெய்வத்திரு. KVM குருசாமி ஜோதிடர் வழியில் அம்மன் அருளால் எளிய முறையில் பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடத்தி வைக்கிறோம்.
மேலும் வரன் தேடுவதில் இரண்டு வகையாக வைத்துள்ளோம்.
1. தாங்களே தங்களுக்கு பிடித்தமான வரன்களை தேடி வரன் அமைத்து திருமணம் செய்துக் கொள்ள வேண்டியது.
2. தங்களுக்கு தகுந்த வரன்களை நாங்களே தேடி பொருத்தம் பார்த்து இரு வீட்டாரையும் கலந்து ஆலோசித்து திருமணம் அமைத்து கொடுப்பது (சேவைக் கட்டணம் தனி)
எங்களுக்கு வரன் பதிவுகள் கிடைக்கும் வழிகள் :
1. நாங்கள் அமைத்து கொடுத்த திருமணங்களில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவும்,
2. தினசரி செய்தித்தாள்களில் KVM திருமண தகவல் மையம் விளம்பரங்கள் மூலமாகவும்.
3. தரமான திருமண அமைப்பாளர்கள் மூலமாகவும்.
4. எங்களிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் மூலமாகவும்.
5. நமது இணையதளம் மூலமாகவும், நம் அலுவலகத்திற்கு நேரடியாக வரன் தேடி வருபவர்கள் மூலமாகவும்.
வரக்கூடிய எண்ணற்ற வரன்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வரன் தேடுவதில் தங்களுக்கு உள்ள சிரமங்களை குறைத்து தங்களுக்கு தகுந்த வரன்களை அமைத்து கொடுக்கின்றோம்.
முக்கிய அறிவிப்பு
• KVM திருமண தகவல் மையத்தின் உரிமையாளர் KVM அய்யப்பன் மட்டுமே KVM திருமண தகவல் மையத்தில் பங்குதாரர்கள் என யாரும் கிடையாது.
• KVM திருமண தகவல் மையத்தின் பெயரை சொல்லி பணம் கேட்பவர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்தால் அதற்கு KVM திருமண தகவல் மையம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
• இணையதளம் மூலம் பெறும் வரன்களை நன்கு விசாரித்து திருமணம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
KVM ஜோதிட நிலையம்
• ஜாதகம் துல்லியமாக கணித்து அன்றைய கோச்சாரப்படியும், நடப்பு கால தசா புக்தியின் படியும் பலன்களை கூறுகிறோம்.
• ஜாதகத்தில் கிரகங்கள் வலுவிழந்து இருந்தாலும், நடப்பு தசா புக்தி அதிக பாதிப்பை கொடுத்தாலும், அதற்கான பரிகாரங்களை மிக எளிய முறையில் எடுத்துக் கூறி பலருடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வழிவகை செய்திருக்கின்றோம்.
• பிறந்த ஜாதகம், ருது ஜாதகம் மிகத் துல்லியமாக வாக்கிய முறையிலும், திருக்கணித முறையிலும், ஜாதக நோட்டு எழுதி தருகின்றோம்.
• நேரடியாகவும், வாட்சாப் மூலமாகவும் ஜாதக பலன்களை கூறுகிறோம்.
• திருமணப் பொருத்தம், தசாபுத்தி சந்திப்பு, திருமணம் கைக் கூடும் காலம் பார்த்து பலன்கள் கூறுகிறோம்.
Office Address:
Head Office:
KVM திருமண தகவல் மையம்,
எண்.10, CSI, I.T.I காம்பளக்ஸ்,
புத்தூர் 4 ரோடு, திருச்சி 620017.
Land Mark: கனரா பேங்க் ATM க்கு வடக்கு புறத்தில் ஆபீஸ் உள்ளது.
Branch Office:
KVM திருமண தகவல் மையம்,
எண்.99, தென்கடைக்குறிச்சி,
நங்கவரம் வழி, குளித்தலை தாலுக்கா,
நங்கவரம் to குழுமணி மெயின்ரோடு .
மேலும் தகவல்களுக்கு
9043055666 செல் & வாட்ஸ் ஆப்
9486066076 செல் .
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!
அந்த திருமணங்கள் எங்கள் மூலம் நடைபெற்றால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!!